வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (13:19 IST)

ஸ்டாலினுக்கு நல்ல புத்தி வர வேண்டும்! – தேங்காய் உடைத்த அர்ஜுன் சம்பத்!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நல்ல புத்தி வர வேண்டும் என அர்ஜின் சம்பத் தேங்காய் உடைத்து வழிபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பேரணியை நடத்தின. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூதனமான வழிபாடு ஒன்றை முன் வைத்திருக்கிறார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.

தூத்துக்குடியில் உள்ள இசக்கியம்மன் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்ட அர்ஜுன் சம்பத் ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு நல்ல புத்தியை தர வேண்டும் என வேண்டி 108 தேங்காய்கள் உடைத்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் குடியுரிமை சட்டம் குறித்த தவறான தகவல்களை எதிர்கட்சிகள் பரப்பிவிட்டதாக கூறியுள்ளார். அடுத்ததாக விவேகானந்தர் பிறந்தநாளில் மதுவிலக்கு அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.