திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2021 (17:58 IST)

இந்தா ஆரம்பிச்சாட்டாருல்ல… மஹா சிவராத்திரிக்கு பொது விடுமுறை கேட்கும் அர்ஜுன் சம்பத்!

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மஹா சிவராத்திரிக்கு அரசு விடுமுறை அளிக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தீபாவளி பொங்கல் கிறிஸ்துமஸ் ரம்ஜான் உள்பட பல பண்டிகைகளுக்கு ஏற்கனவே தமிழக அரசு பொது விடுமுறை விடுத்துள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் தைப்பூசத்துக்கு பொது விடுமுறை என தமிழக முதல்வர் அறிவித்துள்ளது . இந்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட உள்ள வடலூரிலும், மற்ற முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என்பதும் முருக பக்தர்கள் இந்த விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இப்போது மஹாசிவராத்திரிக்கும் அரசு பொது விடுமுறை அளிக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.