ரஜினியின் முடிவு குறித்து அர்ஜூன் மூர்த்தி முக்கியத் தகவல் !
பாஜகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக பொறுப்பு வகித்து வந்தவரும், பிரபல அரசியல் பிரமுகருமான அறியப்பட்டவர் அர்ஜூன் மூர்த்தி. இவர் ரஜியின் வேண்டுகோளை ஏற்று, அவரது புதிய கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார், மேற்பார்வையாளாராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ரஜினி தான் கட்சி தொடங்கப்போவதில்லை எனக் கூறிய நிலையில், அதைத்தான் வரவேற்பதாக அர்ஜூன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த படப்பிடிப்பின்போது, 4 பேருக்கு கொரோனா தொற்றால் ரஜினி ஐதராபாத்தில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். அப்போது அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அப்போலோ மருத்துவமனையின் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னையிலுள்ள போயஸ்கார்டன் இல்லம் திரும்பினார்.
இநிலையில் இன்று ஒரு அவசர அறிக்கை வெளியிட்டார். அதில், நான் கட்சி தொடங்கப்போவதில்லை; இதற்காக என்னை மக்கள் மன்னிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு வரக்கூடாது ஏற்கனவே மாற்று சிறுநீரகம் பொருத்தியுள்ளதால், அரசியல் கட்சி தொடங்கினால் ரத்த அழுத்தம் ஏற்பவாய்ப்புண்டு என்று என்னை நம்பி வருபவர்கலை பலிகடா ஆக்கவிரும்பவில்லை என வெளிப்படையாக கூறியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜூன் சம்பத், ரஜியின் முடிவைத் தான் மனதார ஏற்பதாகவும், அவரது உடல் நிலை மனநிலை தனக்குத் தெரியும் அதனால் அவருக்கு முழு ஆதரவு தருவதாகத் தெரிவித்துள்ளார்.