திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 21 ஆகஸ்ட் 2021 (19:42 IST)

ஊரடங்கு நீட்டிப்பு...திரையரங்குகள் செயல்பட அனுமதி !

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து  அரசு உத்தரவிட்டுள்ளது.  50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் தொடங்கப்பட்டது.
.
அதில்,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரி சுழற்சி முறையில் வகுப்புகளை தொடங்கவுள்ளதாகவும், பொதுமக்களுக்கு கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி எனவும், பூங்காக்கள்,நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படுவதாகவும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
மேலும், அனைத்துக் கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி எனவும், பள்ளிகளில் 9,10,11, 12, ஆம் வகுப்புகளுக்கு மாணவர்களுடன் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அதேபோல், இரவு 9 மணிவரை செயல்பட்டு வந்த கடைகள் இனி இரவு 10 மணி வரை செயல்படலாம் எனவும், கேள்விக்கஈ விடுதிகள், தங்குகள் விடுதிகள், மதுக்கூட்டங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.