1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (12:20 IST)

ஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் கொடுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை!

டெல்லிக்கு வரும் ஆக்ஸிஜன் வாகனங்களை மாநில அரசுகள் தடுத்து நிறுத்தியதால் ஆக்ஸிஜன் சப்ளையை ராணுவத்திடம் ஒப்படைக்க அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மாநில அரசுகள் டெல்லி சென்ற ஆக்ஸிஜன் வாகனங்களை தடுத்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் காணொலி கூட்டத்தில் கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் ஆக்ஸிஜன் தடைப்படாமல் கிடைக்க ஆக்ஸிஜன் ஆலைகள் மற்றும் விநியோகத்தை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.