செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 ஜூன் 2018 (07:26 IST)

வீரப்பனை பிடித்த விஜயகுமாருக்கு காஷ்மீரில் முக்கிய பதவி

தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநில காவல்துறையினர்களுக்கு சவாலாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு கொன்று சாதனை படைத்தவர் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் என்பது அனைவரும் அறிந்ததே. விஜயகுமார் அவர்கள் தற்போது ஓய்வு பெற்றுவிட்டாலும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக உள்ளார்.
 
இந்த நிலையில் விஜயகுமார் அவர்கள் தற்போது காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி அவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்து அங்கு கவர்னர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கவர்னரின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
விஜயகுமார் அவர்களுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைமை செயலாளர் வியாஸ் ஐஏஎஸ் அவர்களும் கவர்னருக்கு ஆலோசகராக இருப்பார் என்றும் இதுகுறித்த அரசாணை ஒன்றும் வெளிவந்துள்ளது.