புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 1 டிசம்பர் 2021 (18:42 IST)

கோவை மேயர் தேர்தலில் கமல் கட்சியின் வேட்பாளர் இந்த பெண்ணா?

கோவை மேயர் தேர்தலில் கமல் கட்சியின் வேட்பாளர் இந்த பெண்ணா?
கோவை மேயர் தேர்தலில் கமல் கட்சியின் மேயர் வேட்பாளராக கல்லூரி அதிபர் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்றாலும் அந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது என்பது தெரியவந்தது
 
இந்த நிலையில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சென்னை மதுரை கோவை திருச்சி உள்பட 10  தொகுதிகளில் மட்டும் மேயர் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளது
 
இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த கல்லூரி அதிபர் அனுஷா ரவி என்பவரை கோவை மேயர் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் திருப்பூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது