Daily Horoscope
✕

திமுக கவுன்சிலர் வேட்பாளர் திடீர் மரணம்! – தொடரும் மரணத்தால் அதிர்ச்சியில் திமுக!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 17 பிப்ரவரி 2022 (09:35 IST)
நாளை மறுநாள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டுமொரு திமுக கவுன்சிலர் வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்றுடன் வாக்குசேகரிப்புக்கான அவகாசம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை பேரூராட்சியில் 2வது வார்டில் திமுக சார்பில் கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்டவர் சித்து ரெட்டி. தேர்தலுக்காக தீவிரமாக தனது வார்டு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்துள்ளார்.

தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் சித்துரெட்டி மாரடைப்பால் திடீரென காலமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இதே ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் பகுதி திமுக வேட்பாளர் மரணமடைந்தார். இது ஈரோடு மாவட்ட திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments