சிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. ஒரே மாதத்தில் 5 விபத்துக்கள்..!
விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலியான அதிர்ச்சி இன்னும் மறைவதற்குள் சிவகாசியில் நேற்று பட்டாசு சாலையில் வெடி விபத்து ஏற்பட்டு இரண்டு அறைகள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது
ஆனால் அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகவும் தெரிகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாராயண புதூர் என்ற பகுதியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருக்கு பட்டாசு ஆலை ஒன்று சொந்தமாக உள்ளது
இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் இரண்டு அறைகளில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் ஒன்றில் காலை 6:00 மணிக்கு மூலப் பொருட்கள் வெடித்து சிதறியது. இதில் மூன்று அறைகள் எடுத்து தரைமாட்டமாகியதாக கூறப்படுகிறது
அதிகாலை 6:00 மணி என்பதால் வேலைக்கு யாரும் அந்த நேரத்தில் நான் வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது
விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் இந்த மாதத்தில் ஐந்தாவது பட்டாசு ஆலை வெடி விபத்து நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Edited by Siva