1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (12:41 IST)

அரசியல் விஞ்ஞானி செல்லூர் ராஜூவுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: அண்ணாமலை

அண்ணாமலை குறித்து நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்த நிலையில் அரசியல் விஞ்ஞானி செல்லூர் ராஜு அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என  அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
எங்களுக்கு மோடி, அமித்ஷா, நட்டா ஆகியவர்கள் தான் முக்கியம் அண்ணாமலை ஜஸ்ட் தமிழக பாஜக தலைவர் தான், எனவே அவரை நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறி இருந்தார். 
 
அவரது கருத்து குறித்து இன்று பதில் அளித்த அண்ணாமலை அரசியல் விஞ்ஞானி செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்திக் கொள்ள முடியாது 
 
நாங்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களை நோக்கியே எங்கள் பயணம் உள்ளது. மக்கள் தான் எங்கள் எஜமானர்கள் என்று தெரிவித்துள்ளார்.  அண்ணாமலையின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva