அண்ணாமலை செல்வது பாத யாத்திரையா, பஸ் யாத்திரையா? - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கேள்வி
அண்ணாமலை செல்வது யாத்திரையா, அல்லது பஸ் யாத்திரையா? என அமைச்சர்
கே.ஆர்.பெரியகருப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக பாதயாத்திரை சென்று கொண்டிருக்கிறார் என்பதும் வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு பெருகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன் அண்ணாமலை செல்வது பாதயாத்திரை? அல்லது பஸ் யாத்திரையா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜகவினர் முதலமைச்சர் மீது சில குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் என்றும் அவர்களது பாராட்டுகளை திமுக அரசு எந்த காலத்திலும் எதிர்பார்க்காது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
மேலும் விலைவாசியை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் இது பரிசீலனையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva