1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (20:30 IST)

''சினிமாவைவிட அரசியலுக்கு முன்னுரிமை'- விஜய் பட நடிகை

jeyasudha
தமிழ் சினிமாவில் கடந்த  1973 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய அரங்கேற்றம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர்,   நான் அவனில்லை, அபூர்வராகங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

சமீபத்தில், நடிகர் விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் வெளியான  வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருனந்தார்.

சினிமாவில் நடிப்பதுடன் அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை ஜெயசுதா கடந்த 2009 ஆம் ஆண்டு ஆந்திர மா நில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் செகந்திராபாத் தொகுதியில்போட்டியிட்டு எம்.எ.ஏவாக தேர்வானர்.கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.

பின்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு  தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அக்கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் சேர்ந்தார்.

அந்தக் கட்சியில் இருந்து விலகிய அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். தெலுங்கானாவில் அம்மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஜெயசுதா அக்கட்சியில் இணைந்தார்.

பாஜகவின் இணைந்த பின் நடிகை ஜெயசுதா,  இனிமேல், சினிமாவில்  நடிப்பதைக் காட்டிலும், அரசியலுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகை ஜெயசுதா,. அடுத்தாண்டு வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வார் என தெரிகிறது.