செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (14:43 IST)

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என நான் ஒருபோதும் கூறவில்லை - அண்ணாமலை

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என நான் ஒருபோதும் கூறவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்தால் தமிழக தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று அண்ணாமலை கூறியதாக செய்திகள் வெளியானது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது என்று தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று நான் ஒருபோதும் கூறவில்லை என்றும் அதிமுக கூட்டணியை அமித்ஷா உறுதி செய்தார் என்று சொல்ல முடியாது என்றும் கூட்டணியில் இருக்கிறோம் என்று தான் கூறியிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார். 
 
தமிழகத்தை பொறுத்தவரை கிளின் பாலிடிக்ஸ் செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்றும் அது 2024 ஆம் ஆண்டு எப்படி செய்வேன் என்பதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் தெரிவித்தார் 
 
Edited by Siva