புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (11:30 IST)

அதிமுக இணைவது அவங்க கைலதான் இருக்கு..! – அண்ணாமலை கருத்து!

அதிமுகவில் மீண்டும் சசிக்கலா இணைய வாய்ப்பிருப்பதாக பேசிக் கொள்ளப்படுவது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெருமளவில் வெல்லாத நிலையில் சசிக்கலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என அதிமுகவில் உள்ளவர்களே தொடர்ந்து பேசத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அதிமுக பிரபலங்கள் சிலர் தொடர்ச்சியாக சென்று சசிக்கலாவை சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக, அமமுக ஒன்றிணைவது குறித்து கருத்து தெரிவித்த கூட்டணி கட்சியான, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “நாங்கள் அதிமுக என்றும் வலுவாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். அதற்காக அவர்கள் ஒன்றிணைய வேண்டுமா என்பதை பற்றி முடிவெடுப்பது ஓபிஎஸ் – ஈபிஎஸ் கையில்தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.