வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (11:54 IST)

இலங்கை காங்கேசன்துறை இடையேயான படகு சேவை.. அண்ணாமலை மகிழ்ச்சி..!

இலங்கை காங்கேசன்துறை இடையேயான படகு சேவை தொடங்கப்பட இருப்பதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
நமது நாட்டுக்கும், நமது நாகரிக இரட்டை நாடான இலங்கைக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் முயற்சியாக, கடுமையான சூறாவளி காரணமாக 1960களில் நிறுத்தப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன்துறை இடையேயான படகு சேவையை, நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள், சமீபத்தில் மீண்டும் தொடங்கியிருந்தார்.
 
இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்ததை, நமது மத்திய அரசு ரூ.300 கோடி மதிப்பில் சீரமைத்துள்ளது. இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம், 150 பயணிகள் பயணம் செய்யக்கூடிய அதிவேக பயணிகள் படகு ஒன்றை இந்தச் சேவைக்காக வழங்கியுள்ளது என்பதையும்,  அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், இந்தியா இலங்கை இடையேயான அதன் முதல் பயணத்தைத் தொடங்கவிருக்கிறது என்பதையும் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 
Edited by Mahendran