புதன், 27 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (14:03 IST)

அதிமுக-பாஜக கூட்டணியில் சிக்கல்.. அண்ணாமலை அவசர ஆலோசனை..!

அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவசர ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகவினர் கடும்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை தூக்கினால் தான் பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக நிபந்தனை விதித்துள்ளது.
 
இந்த நிலையில்  கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து அண்ணாமலை அவசர ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. கூட்டணி வேண்டாம் என்று நாங்கள் நிர்பந்திக்கவில்லை என்றும் அவர்கள் கூறியதற்கு தான் நான் பதில் கூறுகிறேன் என்றும் வெற்றி தோல்வியைவிட தன்மானத்தோடு இருப்பது தான் முக்கியம் என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை கூறியதாக தெரிகிறது 
 
மேலும் பிரச்சனையை நேருக்கு நேர் பேச வேண்டும் என்றும் மேடை இருக்கிறது என்பதற்காக வாய்க்கு வந்ததை பேசக்கூடாது என்றும் அவர் செல்லூர் ராஜு, சிவி சண்முகம் போன்றவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
 
Edited by Siva