செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 11 ஆகஸ்ட் 2021 (19:52 IST)

செய்தியாளர்கள் சந்திப்பின்போது தடை பட்ட மின்சாரம்: அணில் ஓடியிருக்கும் என அண்ணாமலை 'கிண்டல்'

திமுக ஆட்சியை ஆரம்பித்ததிலிருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள், மக்கள் நலத்திட்டங்கள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் திமுக ஆட்சி ஆரம்பமானதில் இருந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது
 
குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இந்த நிலையில் இன்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்திது மத்திய அரசின் சட்டங்கள் குறித்து தமிழ் கையேடுகளை வெளியிட்டு அவர் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
 
அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. அப்போது இது குறித்து கமெண்ட் அடித்த அண்ணாமலை ’அணில் ஓடியிருக்கும் என்று கிண்டலுடன் கூறியதை அடுத்து அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் பாஜகவினர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது