Daily Horoscope
✕

வீ த லீடர்ஸ்!.. நாளை பொள்ளாச்சியில் மாநாடு!.. களம் இறங்கிய அண்ணாமலை..

Updated: சனி, 11 ஜூலை 2026 (11:54 IST)
தமிழக பாஜக தலைவர்களில் முக்கியமானவர் அண்ணாமலை. இன்னும் சொல்லப் போனால் இவர் தமிழக பாஜக தலைவரான பின்புதான் தமிழகத்தில் இந்த கட்சி கொஞ்சம் வளர்ந்தது. தினமும் செய்தியாளர்களை சந்திப்பது திமுகவை விமர்சிப்பது என அரசியல் செய்து வந்தார்.

தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்ததற்கு அண்ணாமலை முக்கிய காரணம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரின் பதவி பறிபோனது. அவருக்கு பின் நயினார் நாகேந்திரன் அந்த பதவியில் அமர வைக்கப்பட்டார். எனவே பாஜகவிலிருந்து விலகுவது என அண்ணாமலை முடிவெடுத்தார். டெல்லி சென்று பாஜக மேலிடத்தில் சிலரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அண்ணாமலி கொடுத்தார். அதோடு ஒரு புதிய இயக்கத்தையும் தொடங்குவதாக அறிவித்து அது தொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டார்..

இந்நிலையில், அண்ணாமலை துவங்கிய வீ த லீடர் இயக்கத்தில் இதுவரை 19 லட்சம் பேர் இணைந்து விட்டனர். இந்நிலையில், இந்த இயக்கத்தின் முதல் மாநாடு நாளை ஜூலை 12ம் தேதி பொள்ளாச்சியில் நடக்கிறது. அதன்படி பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி கொங்குசிட்டி மைதானத்தில் நாளை முதல் மாநாடு நடக்கவிருக்கிறது.

இதில் அண்ணாமலையின் முக்கிய ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். மேலும், 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது..<>

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments