புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 6 நவம்பர் 2020 (11:01 IST)

அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கொலை மிரட்டல் – பரபரப்பு புகார்!

அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான சூரப்பாவிற்கு வீரப்பன் என்ற பெயரில் இருந்து கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசின் ஆலோசனை இல்லாமல் நேரடியாகக் கடிதம் எழுதினார் துணை வேந்தர் சூரப்பா. இதனால் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் வெளியிட்டுள்ளார்.  மேலும் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது சூரப்பாவிற்கு வீரப்பன் என்ற பெயரில் இருந்து கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.