Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலை தேர்வு ஒத்தி வைப்பு: மாணவர்கள் கோரிக்கை ஏற்பு

Written By sivalingam
Updated: வெள்ளி, 3 நவம்பர் 2017 (06:37 IST)
சென்னையில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருவதால் சென்னையின் பெரும்பாலான பகுதி ஸ்தம்பித்துள்ளது. சாலைகளில் அதிகளவு தண்ணீர் இருப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.



 


இந்த நிலையில் நேற்றிரவே சென்னை உள்பட ஆறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அண்ணா பல்கலை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

ஆனால் மாணவர்கள் டுவிட்டரின் மூலம் பல்கலைக்கழக நிர்வாகத்தினர்களுக்கு விடுத்த கோரிக்கையை அடுத்து சென்னை மாவட்ட ஆட்சியரும், வருவாய்துறை அதிகாரிகளும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருடன் ஆலோசணை நடத்தினா். இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் உறுதி செய்துள்ளார்.

எல்லாம் காட்டு

ஜீரோன்னு சொல்றாங்க.. திரள்நிதி கொடுத்து ஹெல்ப் பண்ணுங்க!.. சீமான் கோரிக்கை...

விநாயகரை கரைக்க சென்ற 6 சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்!....

நான்கு மாதங்களில் அரசுக்கு ரூ.20,000 கோடிக்கும் மேல் கூடுதல் வருமானம்.. தவெக அரசு சாதனை...

வரலாற்று சிறப்புமிக்க ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள்.. முதல்வர் விஜய் சாதனை...

அன்பில் மகேஷ் கைப்பற்றப்பட்டவை என்னென்ன? அரசு தரப்பு விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments