செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (12:28 IST)

எப்படி வன்னியர் சமுதாயம்னு காட்டலாம்? – சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை திட்டமிட்டு இழிவுப்படுத்தியுள்ளதாக சூர்யாவிடம் கேள்விகளை அடுக்கியுள்ளார் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ்.

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்துள்ளதாக பரவலாக நல்ல பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவியது என்ற அடிப்படையில் சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.

முக்கியமாக அதில் வில்லனாக வரும் போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமுதாயம் என்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதன் மேல் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெய்பீம் படத்தை முன்வைத்து சூர்யாவுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ்.

” ஜெய்பீம் திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.