வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (10:52 IST)

சன் நெட்வொர்க் அலுவலகத்தில் விஜய்-சூர்யா சந்திப்பு?

நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் நேற்று சன் நெட்வொர்க் அலுவலகத்தில் சந்தித்து கொண்டதாகக் கூறப்படுகிறது
 
நடிகர் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துவரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் நடித்து வரும் நிலையில் இருவரும் நேற்று சன் நெட்வொர்க் அலுவலகத்தில் சந்தித்து கொண்டதாகவும் இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டதாகவும் சன் நெட்வொர்க் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன