திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (10:21 IST)

முதலமைச்சரிடம் பொய் சொல்லி தப்பித்துக் கொள்வேன்… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

மயிலாடுதுறையில் நடந்த ஒரு திருமண மண்டப திறப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் இப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொதுநிகழ்ச்சிகளில் கூட்டம் அதிகமாக கூடுவது தடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறையில் திருமண மண்டப திறப்பு விழா ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் அதிக அளவு கூட்டம் கூடி இருந்தது.

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் ‘நிகழ்ச்சியில் இவ்வளவு கூட்டம் கூடியது குறித்து கண்டிப்பாக முதல்வர் என்னிடம் கேள்வி கேட்பார். தடுப்பூசி செலுத்துக்கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் பின் தங்கி உள்ளதால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் எனக் கூறி தப்பித்துக் கொள்வேன்’ எனக் கூறியுள்ளார்.