ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 8 மே 2024 (14:13 IST)

ஆனந்தம் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!

முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து "ஆனந்தம் விழுதுகள்"என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
 
இந்த அமைப்பு மூலம் பனிரெண்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியை தொடர  முடியாத, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களை  கண்டறிந்து அவர்களின்  முழு கல்வி செலவையும் ஏற்று உயர்கல்வி வழங்குகிறது  ஆனந்தம் தனியார்  அறக்கட்டளை.
 
இதுவரை  820 மாணவர்களுக்கு எம்.பி.பிஎஸ், பொறியியல்,சட்டம், வேளாண்மை, பாராமெடிக்கல் போன்ற பல்வேறு படிப்புகளில் உயர்கல்வியை இலவசமாக  வழங்கியிருக்கிறது.
 
படிப்பை முடித்த 450 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்திய, மாநில அரசுப் பணிகளிலும், பல்வேறு தனியார் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களிலும் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
 
இந்த ஆனந்தம் முன்னாள் மாணவர்களின் சந்திப்பும், அவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியும்  சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இந் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  சென்னை காவல் இணை ஆணையர் தர்மராஜன் ஐ பி எஸ், டாக்டர் பர்வீன் சுல்தானா மற்றும் சிவக்குமார், சதீஷ்குமார், ஜெயராம் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்