நடுரோட்டில் ஜோசியரை வெறித்தனமாக வெட்டிய மர்ம நபர்: திருப்பூரில் பயங்கரம்
திருப்பூரில் ஜோசியர் ஒருவர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் குமரன் ரோடு பகுதியில் ரமேஷ் என்ற ஜோசியர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மட் அணிந்தபடி அங்கு பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் அந்த ஜோசியரை பின் பக்கத்தில் இருந்து வெட்டினார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அந்த நபர் ஆத்திரம் தீர கொடூரமாக வெட்டி கொலை செய்தார். அங்கிருந்தவர்கள் ஒன்றும் செய்யமுடியாதவாறு திகைத்து நின்றனர். பின்னர் அங்கிருந்து சென்ற அவர் ஒரு துண்டு பிரசுரத்தை மக்களிடம் கொடுத்தார்.
அதில் ஜோசியம் என்ற பெயரில் பெண்களை வசியம் செய்து பலரது வாழ்க்கையை சீரழித்துள்ளான் என குறிப்பிட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.