அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ் விபத்து! – நோயாளி – டிரைவர் பரிதாப பலி!
செங்கல்பட்டு அருகே நோயாளி ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த கன்னியம்மாள் என்ற மூதாட்டிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மூதாட்டி மற்றும் அவரது உறவினரையும் ஏற்றி கொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவசரமாக சென்று கொண்டிருந்தது ஆம்புலன்ஸ்.
அப்போது எதிர்பாராத விதமாக எதிரே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின்மீது ஆம்புலன்ஸ் மோதியது. இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் நோயாளி கன்னியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவ உதவியாளரும், கன்னியம்மாள் உறவினரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரை காப்பாற்ற அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகி இருவர் இறந்து போன சம்பவம் அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.