திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (14:59 IST)

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்த அறிவிப்பு.. பாதிப்புகள் ஏற்படுமா?

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் மருத்துவமனை மற்றும் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஆம்புலன்ஸ் சேவையை அரசு குறைக்க முயல்வதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டி வருகிறது,. இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் ஜனவரி 8 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் டிரைவர்கள் உதவியாளர்கள் என சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில் அவர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

ஏற்கனவே கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஆம்புலன்ஸ் சேவையை குறைக்க அரசு முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ள ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் ஜனவரி 8 முதல் வேலைநிறுத்த  அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran