1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2024 (14:28 IST)

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 29ம் நடைபெறவுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் பட்டம் பெறத் தகுதியான மாணவர்கள் செப்டம்பர் 27ம் தேதி அல்லது அதற்கு முன்பு ‘http://tndalu.ac.in’ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு டாக்டர்,அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதினான்காவது பட்டமளிப்பு விழா வருகின்ற 29.09.2024 அன்று பெருங்குடி வளாகத்தின் நிர்வாக கட்டிடத்திலுள்ள பல்கலைக்கழகக் கலையரங்கில் நடைபெறவிருக்கிறது,

மே 2024 மாதத்தில் நடந்து முடிந்த சட்டத்தேர்வில் வெற்றிகரமாக சட்டப்படிப்பை முடித்தவர்கள் மேலும் இது வரை பட்டமளிப்புக்கு விண்ணப்பிக்காதவர்களும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆவர். விண்ணப்பத்தாரர்கள் 27.09.2024 அன்று அல்லது அதற்கு முன் www.tndalu.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பட்டமளிப்பு விழாவிற்கு பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran