வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2024 (15:28 IST)

மீன்வள பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.. என்ன காரணம்?

Minister Anitha
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற மீன்வளப்  பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது..

 நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்ற நிலையில் இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இன்றைய விழாவில் 391 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தர் மற்றும் மீன்வளத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது

பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பெயர் இல்லாததால் அவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Siva