திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (10:15 IST)

பிரதமரை சந்திக்கும் கூட்டணி கட்சிகள்! – கூட்டணி இறுதியாக வாய்ப்பா?

இன்று பிரதமர் மோடி சென்னை வரும் நிலையில் கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதற்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளான தேமுதிக, பாமக, தாமாக உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நிகழ்ச்சிக்கு இடையே சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவெடுக்க வாய்ப்பிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.