அதானி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.. அமெரிக்க ஊடகத்தின் செய்தியால் பரபரப்பு..!
தொழிலதிபர் அதானி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றதாகவும், இந்த சந்திப்பின் போது சில ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாகவும் அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், டாக்டர் அன்புமணி, "தமிழக மானம் அமெரிக்காவில் கப்பலேறுகிறது, மக்கள் பணம் கொள்ளை போகின்றது" என்று தெரிவித்து இருந்ததோடு, இதற்கு தமிழக முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், டாக்டர் ராமதாஸ் அவர்கள், "கௌதம் அதானி முதலமைச்சரை ஏன் வீட்டில் சந்தித்தார், அங்கு அவருக்கு என்ன வேலை?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதானியிடம் சூரிய ஒளி மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் திமுக அரசு கையெழுத்திட்டதாகவும், இதன் காரணமாக தமிழக மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, பரந்தூர் விமான நிலையம் அதானி கட்டுப்பாட்டுக்கு வரப்போகிறது" என்றும், அதற்காக தமிழக அரசு அந்த விமான நிலையத்தை கட்டி முடிக்க தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கேள்வி கேட்ட டாக்டர் ராமதாஸஸ் அவர்களை அவர் வேலையில்லாமல் அறிக்கை வெளியிட்டு கொண்டிருக்கிறார், அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
இப்போது, அமெரிக்க ஊடகமே இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளதால், முதல்வர் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.