1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 22 மே 2021 (14:52 IST)

நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 19 மருத்துவ நிபுணர்கள் முதல்வருடன் ஆலோசனையில் பங்கேற்று ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்குமாறு பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்துள்ளது. 
 
இதையடுத்து நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை ஒருநாளில் அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை மக்கள் வாங்கி கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.