ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்கும் மாறு பரிந்துரை
முதல்வருடான ஆலோசனையில் மருத்துவ குழுவினர் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்கும் மாறு பரிந்துரை செய்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதீப் கவுர், குகநாதன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 19 மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்கு பின்னர் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில் மருத்துவ குழுவினர் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க்கும் மாறு பரிந்துரை செய்துள்ளனர். முன்னதாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் வரும் மே 31 ஆம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.