ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2024 (17:57 IST)

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

School Student
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
சனிக்கிழமைகளில் வழக்கமாக பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், நாளை 2வது சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில மாதங்களாகவே பள்ளிகள் அனைத்து சனிக்கிழமைகளிலும் இயங்கி வந்த நிலையில் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. 
 
இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து வந்த நிலையில் தற்போது நாளை இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே நாளை தமிழக முழுவதும் பள்ளிகள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதே போல ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை என்றாலும் இரண்டாவது சனிக்கிழமை இனி தொடர்ச்சியாக விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran