செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 11 ஜூலை 2024 (15:37 IST)

மாமனார், மாமியார் இருந்தால் 2 நாட்கள் விடுமுறை!? அசாம் அரசு புதிய அறிவிப்பு!

Holiday

அசாமில் பெற்றோர், மாமியார் - மாமனாருடன் நேரம் செலவிட 2 நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளிலும் அரசு பணியாளர்களுக்கு பல வகையான விடுமுறை திட்டங்கள் அமலில் உள்ளது. பின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை போன்ற விடுமுறை திட்டங்கள் பின்பற்றப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை அரசாங்க முக்கிய தினங்கள், மத பண்டிகைகள், உள்ளூர் திருவிழாக்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் அசாம் மாநில அரசு ஆண்டுக்கு 2 புதிய விடுமுறைகளை அறிவித்துள்ளது. ஆனால் இந்த விடுமுறையை பெற நிபந்தனைகளும் உள்ளது. பெற்றோர், மாமியார்-மாமனார் ஆகியோருடன் நேரம் செலவிடுவதற்காகவே இந்த விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களை எடுத்தால் அன்று பணியாளர்கள் தங்கள் பெற்றோர், மாமியார், மாமனாருடன் தான் நேரம் செலவிட வேண்டுமாம்.

மேலும் மாமியார், மாமனாரோ அல்லது பெற்றோர்களோ இல்லாதவர்களுக்கு இந்த விடுமுறை செல்லாது என்றும், அவர்கள் வழக்கம்போல அலுவலகம் வந்து பணி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K