1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 நவம்பர் 2022 (08:44 IST)

நான் அந்த அர்த்தத்துல அப்படி சொல்லல! – இந்தி கருத்து குறித்து அலிஷா விளக்கம்!

Alishah
இந்தி தெரிந்தால் கெட்ட வார்த்தை பேசலாம் என தான் சொன்னதாக வெளியாகியுள்ள செய்திக்கு பாஜக பிரமுகர் அலிஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த சில காலமாக மத்திய அரசின் இந்தி மொழி குறித்த கருத்துகள் மற்றும் முடிவுகள் மாநில அரசுகள் மற்றும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தி மொழிக்கு ஆதரவாக பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன்வளர்ச்சி செயலாளர் அலிஷா அப்துல்லா “ஐதராபாத் அல்லது டெல்லி போன்ற பகுதிகளில் நீங்கள் சாலைகளில் செல்லும்போது சில இளைஞர்கள் உங்களை வழிமறித்து தொல்லை செய்தால் உங்களுக்கு இந்தி தெரிந்தால் அவர்களை திட்டி, எதிர்த்து பேசி அந்த சூழலை சமாளிக்க முடியும்” என பேசியிருந்தார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களிலும், மீடியாவிலும் செய்திகள் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. அதில் அவர் இந்தியில் அவர்களை திட்டலாம் என கூறியிருந்தது, அவர் கெட்டவார்த்தை பேசலாம் என கூறியதாக தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார். இந்தி மொழி தெரிந்திருந்தால் அவர்களை எதிர்த்து பேசும் தைரியம் உண்டாகும் என்ற அர்த்தத்தில்தான் தான் அப்படி பேசியதாகவும், தான் பேசியது திரித்து மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Edited By Prasanth.K