செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (11:43 IST)

தமிழகம் முழுவதும் 15-ந்தேதி பாஜக போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

Annamalai
தமிழகம் முழுவதும் வரும் 15ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் பால் விலை ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பால் விலை ஏற்றத்தை கண்டித்து வரும் 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார் 
 
பால் வழங்கும் நிறுவனம் அதன் நிர்வாக சீர்கேட்டினால் நஷ்டத்தில் நடத்தப்படுகிறது என்றும் தவறான நடைமுறையால் ஏற்படும் நஷ்டத்தை மக்கள் தலையில் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம், தண்ணீர் வரி, கழிவு நீர் வரி என்று அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது பாலுக்கும் விலையை உயர்த்தியிருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும் என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran