செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2022 (22:56 IST)

பாஜக வில் இணையும் மாற்றுக்கட்சியினர்...

bjp
பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதனின் ஆட்டம் ஆரம்பம் அதிர வைக்கும் செயலால் மாற்று கட்சியிலிருந்து விலகி பாஜக வில் இணையும் மாற்றுக்கட்சியினர் ! 
 
திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளிலிருந்து விலகி சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பாஜக கட்சியில் இணைந்தனர்.
 
கரூர் மாவட்ட பாஜக தலைவராக இருப்பவர் வி.வி.செந்தில்நாதன், இவர் மாநிலத்தலைவர் அண்ணாமலையை போல, பம்பரம் போல் சுழன்று காலைமுதல் மாலை வரை ஆங்காங்கே கோயில் கும்பாபிஷேகம் மற்றும் பொதுமக்கள் பிரச்சினைகளில் தானாகவே முன்வந்து களத்தில் குதித்து மக்களோடு மக்களாக போராடி வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அவர்களது அரசியல் களத்தில் பலரும் ஈர்க்கப்பட்டு தமிழக அளவில் பாஜக கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில், மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில், அரவக்குறிச்சி கிழக்கு மண்டல் தலைவர் சங்கர் கணேஷ், மண்டல் பொதுச்செயலாளர் கனகராஜ்,  மருத்துவபிரிவு மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் வெஞ்சமாங்கூடலூர் கீழ்பாகம் பஞ்சாயத்திற்குட்பட்ட அதிமுக, திமுக, பாமக, தே.மு.தி.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி சுமார் 100 க்கும் மேற்பட்டோர் தங்களை பாஜக கட்சியில் இணைத்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன், மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், இளைஞர் அணி ஒன்றிய தலைவர் உதயகுமார், தொழில்பிரிவு மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கட்சியில் இணைந்த அனைத்து பிரமுகர்களும் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, கட்சியில் இணைந்த அனைவருக்கும் காவித்துண்டு போர்த்தி பாஜக கட்சியில் இணைத்து கொண்டு, குழு புகைப்படங்களும் எடுத்து கொண்டனர்.