அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திடீர் ஒத்திவைப்பு: பின்னணி என்ன?
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி நடைப்பெற இருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து 6 நாட்களாக எழுச்சி போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக அவசர சட்டம் மற்றும் நிரந்தர சட்டம் தமிழக சட்டபேரவையில் இயற்றப்பட்டது.
அதை கொண்டாடும் அவகையில் அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெறும் என்று அப்பகுதி கிராம மக்களால் அறிவிக்கப்பட்டது. தற்போது திடீரென ஜல்லிக்கட்டு கமிட்டி சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்படுகிறது என்றும், முதல்வரை சந்தித்த பிறகு தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சரை ஜல்லிக்கட்டு கமிட்டி சந்திந்த பின்னர் புதிய தேதி முடிவு செய்யப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி ஜல்லிக்கட்டு கமிட்டி தமிழக முதலவரை சந்திக்க உள்ளனர்.
இன்று மாலை சுமார் 4 மணி அளவில் மதுரை மாவட்ட் ஆட்சியர் அலுவலகத்தில் அலங்காநல்லூர் கிராம மக்கள் முதல்வரை சந்தித்த பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் தேதி அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
பாலமேட்டு பகுதியிலும் மக்கள் இதே காரணங்கள் கூறி பிப்ரவரி 2ஆம் தேதி நடைப்பெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஒத்திவைத்துள்ளனர்.