தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏகேஎஸ் விஜயன்! – தலைமை செயலாளர் அறிவிப்பு!
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏகேஎஸ் விஜயன் தலைமை செயலாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஏகேஎஸ் விஜயன் நீண்ட காலமாக திமுக உறுப்பினராக இருப்பதுடன், பலமுறை சட்டமன்ற தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டவர். தற்போது திமுக விவசாய அணி செயலாளராக இருந்து வரும் ஏகேஎஸ் விஜயனை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் சார்பில் மாநில கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்வது, வலியுறுத்துவது உள்ளிட்ட பணிகளை ஏகேஎஸ் விஜயன் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.