திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 30 மார்ச் 2023 (23:43 IST)

எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து கூறிய அஜித்.. பரபரப்பு தகவல்..!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதிமுக பொது குக் மற்றும் பொதுச் செயலாளர் குறித்த வழக்கு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சாதகமாக முடிந்தது. 
இதனை அடுத்து இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவி ஏற்றுக்கொண்டார் என்பதும், அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னால் அஜித்தின் தந்தை காலமானபோது அவருக்கு தொலைபேசியில் எடப்பாடி பழனிச்சாமி தனது இரங்கலை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran