செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 மார்ச் 2023 (07:59 IST)

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைத்திருட்டு.. கார் டிரைவரும் கைது..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்ற பெண் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரிடம் இருந்து சுமார் ஒரு கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஈஸ்வரியை அடுத்து தற்போது கார் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கார் டிரைவர் ஆக வேலை செய்த வெங்கடேசன் என்பவர் ஈஸ்வரி உதவியுடன் 100 சவரன் தங்க நகைகள் 30 கிராம் வைரம் மற்றும் நான்கு கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடி உள்ளதாகவும் இந்த பொருள்கள் அனைத்தையும் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
கார் ஓட்டுநர் வெங்கடேசன் உதவியுடன் அவரது வீட்டில் 18 ஆண்டுகளாக வேலை செய்து வந்த ஈஸ்வரி என்பவர் சிறிது சிறிதாக நகைகளை திருடி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva