1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (15:40 IST)

பாலியல் புகார் எதிரொலி: மேலும் ஒரு பாதிரியார் கைது..!

ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை நேற்று போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாதிரியார் மீது பாலியல் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கன்னியாகுமாரியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியார் பெனடிக் என்பவர் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் மீது பெண்கள் சிலர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாதிரியார் மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மகிழ்வண்ணநாதபுரம் என்ற பகுதியில் சர்ச்சில் போதகராக இருந்தவர் நாகர்கோவிலில் சேர்ந்த ஸ்டான்லி குமார். இவர் இளம் பெண்களுடன் தவறாக நடந்து கொண்டதாக டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்கள் வந்துள்ளது. இந்த நிலையில் இந்த புகார் மீது நடவடிக்கையை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran