1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2023 (23:50 IST)

இந்துத்துவம் பொய்களால் கட்டமைக்கப்பட்டது: டுவிட் செய்த பிரபல நடிகர் கைது..!

இந்துத்துவம் பொய்களால் கட்டமைக்கப்பட்டது என ட்விட்டர் பக்கத்தில் டுவிட் செய்த பிரபல நடிகர் ஒருவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
 
நடிகர், சேத்தன் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் இந்துத்துவம் பொய்கள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது என்று டுவிட் செய்தார். 
 
மேலும் சமத்துவம் என்ற உண்மையின் மூலமே இந்துத்துவத்தை வீழ்த்த முடியும் என்றும் அவர் அந்த வீட்டில் தெரிவித்து இருந்தார். நடிகர் சேத்தன் குமார் இந்து ஆதரவாளர்கள் பல கண்டனம் தெரிவித்த நிலையில் இது குறித்து காவல்துறையில் புகார்கள் குவிந்தது. இதனை அடுத்து அவர் அதிரடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
Edited by Mahendran