1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 8 ஜூன் 2022 (17:22 IST)

சென்னையில் ஏர்டெல் செல்போன் சேவை பாதிப்பு: வாடிக்கையாளர்கள் அவதி

Airtel
சென்னையில் திடீரென பல்வேறு இடங்களில் ஏர்டெல் செல்போன் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தனியார் தொலைத் தொடர்புத் துறைகளில் ஏர்டெல் மிக அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் திடீரென சுமார் 30 நிமிடங்கள் ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து பிற போனுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை என வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்
 
இதனை அடுத்து தொழில் நுட்ப ஊழியர்கள் இதுகுறித்த குறைபாட்டை சரி செய்ததாகவும் அதன் பின் தற்போது ஏர்டெல் செல்போன் சேவை வழக்கம்போல் இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஏர்டெல் சேவை பாதிப்பு ஏற்பட்டதால் சில நிமிடங்களில் சென்னை ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது