வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (15:09 IST)

அடுத்து 4 நாட்களுக்கு வெதர் எப்படி இருக்கும்??

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
தமிழகத்தில் மழை பெய்யும் விவரங்கள் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதோடு இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
அதாவது நாளை முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.