சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு..
டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக திடுக்கிடு தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் சமீப நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருவதால், அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காற்று மாசை கட்டுக்குள் கொண்டுவர டெல்லி அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் மணலி பகுதியில், பனி மூட்டத்தோடு காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக காற்றின் தரக்குறியீடு 320 வரை அதிகரித்துள்ளதாகவும் திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.
வழக்கமாக காற்று தர குறியீடு 50 வரை மட்டுமே இருக்கும் நிலையில் 320 வரை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் காற்று மாசு அதிகரிக்கும் என வெதர் மேன் பிரதீப் ஜான் கூறிய நிலையில், அதனை வானிலை ஆய்வு மையம் மறுத்தது. ஆனால் தற்போது சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக வெளிவந்த செய்தி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.