செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 2 மே 2018 (10:12 IST)

ஆம்புலன்ஸ்சிற்கு வழி விடாமல் பொதுக்கூட்டம் நடத்திய அதிமுக அமைச்சர்

அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆம்புலன்ஸ்சிற்கு வழி விடாமல் பொதுக்கூட்டம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று உழைப்பாளர்கள் தினம் என்பதால் அதிமுக சார்பில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செக்காணூரணியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழா ஒருங்கிணைப்பாளர்கள், தேசிய நெடுஞ்சாலையை மறித்து மேடை அமைத்தனர். வருவாத்துறை அமைச்சர் ஆர்.பி.உதய்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜன் செல்லப்பா, மக்கள் கூடுவதற்காகத் தான் தைரியமாக நெடுஞ்சாலையில் மேடை போட்டுள்ளோம் என்றார்.
அவர் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே, அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வழி இல்லாமல் தவித்தது. பின் மாற்றுப்பாதையில் சுற்றி சென்றது. அமைச்சர்களே இப்படி மக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.