இடைத்தேர்தலில் ஜெயிக்க அதிமுக ’மாஸ்டர் பிளான் ’

திங்கள், 22 ஏப்ரல் 2019 (17:45 IST)
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 29 ஆம் தேதி முடிகிறது.

இந்நிலையில் இத்தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அமமுக ஆகியக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தற்போது, 4  தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு அதிமுக தலைமை தேர்தல் பணிக்குழுவை நியமனம் செய்துள்ளது.
 
இந்நிலையில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு 17 மற்றும் 11 அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்தல் களப்பணியாற்ற வேண்டுமென அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
 
அரவக்குறிச்சிக்கு 14 அதிமுக மாவட்டப்பொறுப்பாளர்கள் தேர்தல் பணியாற்ற நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சூலூர் தொகுதிக்கு அதிமுகவின்  13 மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள் என்றும் தலைமை தெரிவித்துள்ளது.
 
4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு அதிமுக தேர்தல் பணிக்குழு நியமனம் செய்துள்ளதை எதிர்க்கட்சிகள் கூர்ந்து கவனிக்கத்துவருவதாகவும் தகவல் வெளியாகிறது.

எல்லாம் காட்டு

நான் தமிழரே இல்லையா? என்னுடைய பெயர் திருமாவளவன் இல்லையா? பொங்கி எழுந்த விசிக தலைவர்...

சிவசேனா போலவே சரத்பவார் கட்சியும் பாஜகவிடம் சரண்டரா? முதல்வரை சந்தித்த முக்கிய பிரபலங்கள்...

லஞ்சம் யாராவது கேட்டா உடனே போன் பண்ணுங்க.. வாட்ஸ் அப் நம்பரை கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை....

பள்ளி வளாகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவருக்குக் கத்திக்குத்து – சக மாணவர் வெறிச்செயல்!

ஐஆர்சிடிசி -க்கு புதிய இணையதளம்.. 4 முக்கிய வசதிகள்.. இனி பயணிகளுக்கு குஷி தான்...

அடுத்த கட்டுரையில்
Show comments