செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (14:42 IST)

முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் அதிமுகவில் இருந்து நீக்கம்.. ஈபிஎஸ் அதிரடி

Thalavai Sundaram
அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கழகத்தின் கொள்கை குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரம் அவர்கள், தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் பேரணி நடந்த நிலையில், அந்த பேரணியை அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்ததாக தகவல் வெளியானதையடுத்து, அவர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran